இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் உயர்ந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றது. கடந்த சில நாட்களாகவே, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஜூன் 4 காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 564 புதிய கொரோனா தொற்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். .
இதுவரை, நாட்டில் மொத்தமாக 4,866 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று வரை மொத்தமாக 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இன்று புதிதாக 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இன்று 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் மாநில வாரியான விபரம்:
-
மகாராஷ்டிரா – 3 பேர்
-
கர்நாடகா – 2 பேர்
-
டெல்லி – 2 பேர்