இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று எழுச்சியுடன் காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கியது முதல் ஏற்றத்துடன் காணப்பட்டது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் இருந்தது.

இதே நிலை வர்த்தக நேர முடிவு வரை காணப்பட்டது. முடிவில், வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்ந்து 85,609 புள்ளிகளாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தையில் வர்த்தக நேர முடிவில் நிப்டி 320 புள்ளிகள் அதிகரித்து, 26,205 புள்ளிகளாக இருந்தது.

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று நிலவிய இந்த எழுச்சியால், முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.4 லட்சம் கோடி லாபம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version