ஹம்பி என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள விஜயநகர மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும்.[2] மாநிலத்தின் கிழக்கு மற்றும் மையப் பகுதியில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள ஹம்பி, ஹோஸ்பெட் நகருக்கு அருகில் உள்ளது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான விருபாக்ஷா கோயிலுடன் கூடிய ஹம்பி குழு நினைவுச்சின்னங்களை நடத்துவதற்கு இது பிரபலமானது. ராமாயண காலத்தில் இந்த நகரம் கிஷ்கிந்தா என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.

கர்நாடக மாநிலத்தில் கிழக்கு மற்றும் மையப் பகுதியில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த நகரமான ஹம்பி யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளமாக விளங்குகிறது. எம்பி நகரத்தில் குறிப்பாக விருபாஷா கோயில் மற்றும் நிறைய நினைவுச் சின்னங்களை கண்டு களிக்கலாம். ராமாயண காலத்தில் இந்த நகரம் கிஷ்கிந்தா என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 14 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரையில் விஜயநகர பேரரசின் தலைநகரமாக இந்த ஹம்பி நகரம் விளங்கியதாகவும் கூறப்படுகிறது.

பல சிறப்புகள் நிறைந்த இந்த நகரத்தைக் காண இந்தியாவில் உள்ள பிற நகரங்களில் உள்ள மக்கள் மட்டுமின்றி பிற நாட்டு மக்களும் வருவது வழக்கமான ஒன்றாக இருந்தது. குறிப்பாக வெளிநாட்டு மக்கள் நிறைய பேர் இந்த நகரத்திற்கு வந்து போவது வழக்கமாக இருந்தது.

இந்த வருடம் (2025)மார்ச் மாதம்  நடந்த கோர சம்பவம் :

இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த நகரத்தில் வைத்து மூன்று பேர் கொண்ட கும்பல் ( குற்றவாளிகள் மூன்று பேரும் இந்தியர்கள் ) இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். ஒரு பெண் இஸ்ரேலை சேர்ந்தவரும் மற்றொரு பெண் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததுமட்டுமல்லாமல், ஒருவரை (கொலை செய்யப்பட்டவர் இந்தியர்) கொலையும் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி இரண்டு பேரை இவர்கள் தாக்கியம் உள்ளனர். அதில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்தவரும் மற்றொருவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ஆவார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நிறைய பயணிகள் இந்த நகரத்திற்கு வர பயந்தனர் என்று தான் சொல்ல வேண்டும். சரியான பாதுகாப்பு மற்றும் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இந்த நகரத்திற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முன்பு போல வருவதில்லை.

2023 முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ( சரியாக 19,838) சுற்றுலா பயணிகள் இந்த நகரத்திற்கு வந்த நிலையில், 2024 முதல் 2025 ஆம் ஆண்டு வரை வெறும் 4000 (சரியாக 3,818) பயணிகள் பயணிகள் மட்டுமே இதுவரை வந்துள்ளனர்.

அங்கே சரியான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லாமல் போனதால், இந்த இடத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை குறைத்துக் கொண்டனர். கர்நாடக அரசு விரைந்து சரியான பாதுகாப்பையும், சரியான பராமரிப்பையும் இந்த இடத்திற்கு கொடுத்தால் மட்டுமே மீண்டும் இந்த நகரத்திற்கு பழையபடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். அவை கூடிய விரைவில் நடக்கும் என்று நம்புவோம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version