நேற்றைய தினத்தினை தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச்சந்தை இன்றும் (மே 20) சரிவுடன் முடிவடைந்தது.
பெரிய நிறுவனங்கள் உள்பட அனைத்து துறை பங்குகளும் புள்ளிப் பட்டியலில் சரிவுடன் காணப்பட்டன. டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ் ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே சாதகமான சூழலில் இருந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 872.98 புள்ளிகள் சரிந்து 81,186.44 புள்ளிகளாக நிறைவடைந்தது. இது, மொத்த வணிகத்தில் 1.06% சரிவாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 261.55 புள்ளிகள் சரிவடைந்து 24,683.90 புள்ளிகளாக நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது, 1.05% சரிவாகும்.
இதையும் படிக்க: “‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் உலகின் மிகப்பெரிய காப்பீட்டு திட்டம்..” பிரதமர் மோடி புகழாரம்!
நேற்றும் பங்குச்சந்தை சரிவுடனே நிறைவடைந்தது. சென்செக்ஸில் மட்டும் ரூ.443.67 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பங்குச்சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன. இதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.47 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.