Close Menu
    What's Hot

    “இது சினிமா கிடையாது… ‘ரீல்’ ஹீரோ ‘ரியல்’ ஹீரோவாக மாற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

    டி20: தோனியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்!

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மேட்ரிமோனி வழியாக நூதன திருட்டு.. ஏமாற்றப்பட்ட மணமகன்!
    தமிழ்நாடு

    மேட்ரிமோனி வழியாக நூதன திருட்டு.. ஏமாற்றப்பட்ட மணமகன்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250521 WA0002
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுக்கா, ஏம்பலம் அடுத்த சோகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் வயது லாரி ஓட்டுநர்.இவர் வயதான தனது தாய் நவநீதம் என்பவரோடு வாழ்ந்து வருகிறார். விஜயகுமார் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

    விஜயகுமார் திருமணம் செய்ய பெரியவர்களால் முடிவு செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடமாக பெண் தேடிவந்துள்ளார். திருமணத்திற்கு பெண் கிடைக்காத நிலையில் நண்பர்களோடு உதவியோடு ஒரு சமூகத்தைச் சார்ந்த வன்னியர் மேட்ரிமோனி வலைதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளார்.

    விஜயகுமார் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ள நிலையில் பெரிதாக சமூக வலைதளத்தில் அனுபவம் இல்லாததால் வரன்கள் பார்ப்பதில் இவருக்கு ஆர்வம் இல்லாமல் செல்போனில் இருந்த தனியார் வரன் பார்க்கும் வன்னியர் மேட்ரிமோனி செயலியை மட்டும் டெலிட் செய்துள்ளார். ஆனால் பதிவை நீக்காமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் பிப்ரவரி மாதம் விஜயகுமாருக்கு பிரியங்கா என்ற 28 வயது பெண்மணி போன் செய்து மாப்பிள்ளை வீடு பார்க்க வருகிறோம் நான் தான் மணப்பெண் என்று கூறியுள்ளார்.

    விஜயகுமாரும் தாயிடம் சொல்லியுள்ளார். பிரியங்கா உறவினர்களோடு ஜெயக்குமார் வீட்டுக்கு சென்று டீ காபி குடித்துவிட்டு பின்னர் மீண்டும் வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு சென்றுள்ளனர்

    கடந்த மாதம் விஜயகுமார் வீட்டிற்கு சென்ற பிரியங்கா விஜயகுமாரின் வீட்டில் சாப்பிடும் போது விஜயகுமாருக்கும் விஜயகுமார் தாயாருக்கும் தெரியாமல் சாப்பாட்டில் மயக்க மருந்தை கலந்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

    இந்த நிலையில் அவர்கள் மயக்கம் அடைந்தவுடன் விஜயகுமார் திருமணத்துக்காக வைத்திருந்த 3.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நாலு பவுன் தங்க நகைகளை பிரியங்கா மற்றும் அவரோடு வந்தவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

    மயக்கம் அடைந்த விஜயகுமார் மற்றும் அவர்கள் தாயார் அடுத்த நாள் காலை எழுந்து பார்க்கும் போது வீட்டில் பணம் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து விஜயகுமார் தெள்ளார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    மேலும் பிரியங்கா சம்பந்தப்பட்ட நபர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் தனக்கு பாதுகாப்பு வேண்டுமென்றும் அவர்களை உடனடியாக பிடித்து கைது செய்ய வேண்டும் தனது நகை மற்றும் பணத்தை மீட்டுக் கொடுக்க கோரி இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    காவல் நிலையம் சமூக வலைதளம் திருமண மோசடி திருவண்ணாமலை நகை திருட்டு பணம் திருட்டு பிரியங்கா மயக்க மருந்து மேட்ரிமோனி மோசடி மோசடி புகார் லாரி ஓட்டுநர் வன்னியர் மேட்ரிமோனி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதொடர் சரிவில் இந்திய பங்கு சந்தைகள்.. காரணம் என்ன?
    Next Article Vastu Tips: போர்க்களமாகும் படுக்கை அறை.. கணவன் மனைவி சண்டை தீர பரிகாரம் !
    Editor TN Talks

    Related Posts

    “இது சினிமா கிடையாது… ‘ரீல்’ ஹீரோ ‘ரியல்’ ஹீரோவாக மாற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

    July 24, 2026

    சீமை கருவேலம் மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    July 24, 2026

    ”நம்பிக்கை தரும் கல்வி முறை  வேண்டும்”- மாணவர்களின் போராட்டத்திற்கு செளந்தர்யா ரஜினிகாந்த் ஆதரவு!

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “இது சினிமா கிடையாது… ‘ரீல்’ ஹீரோ ‘ரியல்’ ஹீரோவாக மாற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

    டி20: தோனியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்!

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    சீமை கருவேலம் மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    ”நம்பிக்கை தரும் கல்வி முறை  வேண்டும்”- மாணவர்களின் போராட்டத்திற்கு செளந்தர்யா ரஜினிகாந்த் ஆதரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.