Close Menu
    What's Hot

    மேகதாது அணை: புதிய நடுவர் மன்றக் கோரிக்கை தமிழ்நாட்டிற்கு பாதகம்..!! வைகோ விளாசல்..!!

    ECR-க்கு மாறுகிறதா தமிழக சட்டசபை..?? வெளியான பரபரப்பு தகவல்..!!

    சட்டசபையில் எழுந்த அடுக்கடுக்கான கேள்விகள்..!! தரமான பதிலடி கொடுப்பாரா முதல்வர் விஜய்..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் காப்பீடு; மகளிர் வங்கியில் ரூ.25,000!. விஜய் அறிவிப்பு!
    இந்தியா

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் காப்பீடு; மகளிர் வங்கியில் ரூ.25,000!. விஜய் அறிவிப்பு!

    Editor web3By Editor web3April 4, 2026Updated:April 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    puthucherry vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, புதுச்சேரி – கடலூர் சாலையில் ஒன்றிணைந்த 6 தொகுதி வேட்பாளர்கள் மற்றும் தட்டாஞ்சாவடியில் சங்கமித்த 12 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய விஜய், புதுச்சேரி தேர்தல் அறிக்கையை அறிவித்தார்.
    அதில் துணை நிலை ஆளுநரின் தலையீடு இல்லாமல், மாநில அந்தஸ்து கொண்டு 100% முயற்சி செய்வோம். ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்  நடத்தப்படும்.
    மகளிருக்கு மகப்பேறு உதவித்தொகையாக ரூ.25000 வழங்கப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், மீனவர்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.20 மானியம் வழங்கப்படும், ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ கப்பீடு வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
    தொடர்ந்து பேசிய விஜய், களத்தில் இருப்பவர்களை தான் வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளேன். இங்க இரண்டு கூட்டணி நீங்கள் தனியா வந்து என்ன செய்ய போகிறீர்கள் என கேட்கின்றனர். இங்கு காங்கிரஸ் – திமுக கூட்டணி 5, 6 முறை ஏமாத்திடாங்க.  புதுச்சேரியில் திமுகவும் – காங்கிரஸும் பேருக்கு தான் கூட்டணி; அது ஒரு குழப்பமான கூட்டணி, தமிழகத்திலும் அப்படிதான் உள்ளது என்றார். பாஜக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி சோர்ந்து போன கூட்டணி எனவும் விமர்சித்த விஜய், இங்கு அரசியல் வியாபாரம் நடக்கிறது. 2 கூட்டணி உள்ள கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இருந்தன. ஆனால் 2 கட்சிகளும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை கொடுக்க வில்லை என்றார்.
    தீய சக்தி திமுக, காங்கிரஸ் கூட்டணியும் வேண்டாம், பாஜக கூட்டணியும் வேண்டாம். எனவே மக்களோடு மக்களாக இருக்கும் நமது தவெக வேட்பாளர்களுக்கு உங்கள் விஜய்க்கு வாக்களிப்பதாக நினைத்து நமது வேட்பாளர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். தமிழகத்தில் தவெக ஆட்சி அமையும், அதே போல் புதுச்சேரியிலும் தவெக ஆட்சி அமையும் என நம்புவதாக” தெரிவித்துள்ளார்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு!. ஒட்டன்சத்திரத்தில் சோகம்!. 
    Next Article “தனியா போக மாட்டேன்” விஜய்யால் கடுப்பாகும் மூத்த நிர்வாகிகள்!
    Editor web3
    • Website

    Related Posts

    மேகதாது அணை: புதிய நடுவர் மன்றக் கோரிக்கை தமிழ்நாட்டிற்கு பாதகம்..!! வைகோ விளாசல்..!!

    June 23, 2026

    ECR-க்கு மாறுகிறதா தமிழக சட்டசபை..?? வெளியான பரபரப்பு தகவல்..!!

    June 23, 2026

    சட்டசபையில் எழுந்த அடுக்கடுக்கான கேள்விகள்..!! தரமான பதிலடி கொடுப்பாரா முதல்வர் விஜய்..??

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேகதாது அணை: புதிய நடுவர் மன்றக் கோரிக்கை தமிழ்நாட்டிற்கு பாதகம்..!! வைகோ விளாசல்..!!

    ECR-க்கு மாறுகிறதா தமிழக சட்டசபை..?? வெளியான பரபரப்பு தகவல்..!!

    சட்டசபையில் எழுந்த அடுக்கடுக்கான கேள்விகள்..!! தரமான பதிலடி கொடுப்பாரா முதல்வர் விஜய்..??

    ஜூலை 1ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை..!! குஷியில் பஞ்சாப் பெண்கள்..!!

    திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு: உயிரிழப்பு 9ஆக உயர்வு..!! தொடர் சோகம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.