Close Menu
    What's Hot

    திருப்பூர் ஜவுளித் தொழிலுக்கு மெகா பூஸ்ட்… ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிப்பு!

    ரூ.13 லட்சம் கோடி கடன்.. பொருளாதார சவாலின் மத்தியில் முதல் பட்ஜெட்.. மரிய வில்சனின் பின்னணி என்ன?

    இந்தியாவின் முதல் AI City.. அறிவகத்தில் உருவாகும் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»கரூர் வழக்கு!. சிபிஐ முன்பு இன்று மீண்டும் ஆஜராகிறார் விஜய்!
    இந்தியா

    கரூர் வழக்கு!. சிபிஐ முன்பு இன்று மீண்டும் ஆஜராகிறார் விஜய்!

    Editor web3By Editor web3January 19, 2026Updated:January 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay to cbi headquarters
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார்.

    கடந்த செப். 27ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த நவ.25-ம் தேதி தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர்.

    இவர்களுடன், தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி. மதியழகன், எம்.சி. பவுன்ராஜ் ஆகியோரும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். சிபிஐ அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளித்தனர். டிச.4-ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலும் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரிடம் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

    இதற்கிடையே, இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ஏற்ற தவெக தலைவர் விஜய் கடந்த 13ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. அவரிடம் மறுநாள் நடைபெற இருந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து அவர் சென்னை திரும்பினார். இந்த நிலையில், சிபிஐ முன்பு 2-வது முறையாக இன்று விஜய் ஆஜராகிறார். இதற்காக அவர் நேற்று மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒருநாள் தொடரில் அதிக ரன்கள்!. வரலாற்று சாதனை படைத்த டேரில் மிட்செல்!. 
    Next Article EPS-க்கு அரசு ஊழியர்கள் மீது திடீர் கரிசனம் ஏன்?. இது தேர்தல் நாடகம்!. அன்பில் மகேஷ் கேள்வி!
    Editor web3
    • Website

    Related Posts

    திருப்பூர் ஜவுளித் தொழிலுக்கு மெகா பூஸ்ட்… ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிப்பு!

    August 5, 2026

    ரூ.13 லட்சம் கோடி கடன்.. பொருளாதார சவாலின் மத்தியில் முதல் பட்ஜெட்.. மரிய வில்சனின் பின்னணி என்ன?

    August 5, 2026

    இந்தியாவின் முதல் AI City.. அறிவகத்தில் உருவாகும் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் ஜவுளித் தொழிலுக்கு மெகா பூஸ்ட்… ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிப்பு!

    ரூ.13 லட்சம் கோடி கடன்.. பொருளாதார சவாலின் மத்தியில் முதல் பட்ஜெட்.. மரிய வில்சனின் பின்னணி என்ன?

    இந்தியாவின் முதல் AI City.. அறிவகத்தில் உருவாகும் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    மக்களை கவர்ந்த பட்ஜெட் அறிவிப்புகள்… 8 கிராம் தங்கம் முதல் வெற்றி மடிக்கணினி வரை!

    மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய சைக்கிள் திட்டம்.. அமைச்சர் மாஸ் அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.