கான்பூரை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் செய்த செயல் தற்பொழுது இந்திய மக்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கான்பூரைச் சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் அபிஷேக் யாதவ். அவர் பீடா கடை வைத்திருக்கிறார். அன்றாடம் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தில் பத்து ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்களை 12 மாதம் முழுவதும் தொடர்ந்து சிறுக சிறுக சேர்த்திருக்கிறார்.

சரியாக ஒரு லட்ச ரூபாய் சேர்ந்த பின்னர் அதை ஒரு நகைக்கடைக்கு கொண்டு சென்று, தன் மனைவிக்கு ஒரு தங்க சங்கிலியை வாங்கி இருக்கிறார்.
இது சம்பந்தமாக அந்த நகைக்கடை வியாபாரி கூறியது,
“தங்கச் சங்கிலியை வாங்க திடீரென பையில் இருந்து பத்து ரூபாய் மற்றும் இருவது ரூபாய் நாணயங்களை அவர் அடுக்கி வைத்ததும் எங்களுக்கு ஆச்சரியமாகப் போனது. இவற்றை எங்களால் பெற முடியாது ஏன் வங்கியில் கூட இவ்வளவு நாணயங்களை வாங்கிக் கொள்ள மாட்டார்கள் என்று கூறினேன்.
அதற்கு அவர் என் மனைவி இதுவரை என்னிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று எதுவும் கேட்டதில்லை. இது என் மனைவிக்காக கொடுக்கப் போகும் பரிசு அண்ணா என்று கூறினார். அவர் கூறியவுடன் எனது மனம் நெகிழ்ந்தது. அவருடைய காயங்களை வாங்கிக்கொண்டு நாங்களும் அவருக்கு தங்க சங்கிலியை கொடுத்து விட்டோம்”.
தங்க சங்கிலியை வாங்கி நேராக தனது மனைவியை (மனைவியின் பெயர் ராக்கி) சந்தித்து அதை அவர் பரிசளித்திருக்கிறார். முகம் நிறைய புன்னகையுடன் பரிசை பெற்றுக் கொண்ட அவரது மனைவி, “எனது புன்னகையை காண்பதற்காகவே அவர் இவ்வளவையும் செய்து இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

இவர்கள் இருவரது காதல் கதை தற்பொழுது இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி எப்படி காதலிக்க வேண்டும் என்று நாம் அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம்.
