நாட்டில் பிரசவத்தின் போது தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக இந்திய பதிவு அறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள் பிறக்கும் போது தாய்மார்கள் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 130 லிருந்து 93 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசவத்தின் போது குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 39 லிருந்து 27 ஆக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாலின விகிதம் 2014 ஆம் ஆண்டு 899 ஆக இருந்து 2021 ஆம் ஆண்டு தொள்ளாயிரத்து 13 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.