இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஹோண்டுராஸ் நாட்டின் தூதரகம் இன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. இந்த விழாவில் இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.

விழா முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹோண்டுராஸுடன் உருவாகும் புதிய தூதரகத் தொடர்பு இந்திய-மத்திய அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாக இருக்கும் எனக் கூறினார். இதே வேளையில், சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார். “அந்த சூழ்நிலையில், இந்தியாவுடன் உறுதுணையாக நின்ற நாடுகளில் ஹோண்டுராஸ் ஒன்றாக இருந்தது என்பது முக்கியமான விடயமாகும்,” என்றார் அவர்.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை பற்றி தெளிவான நிலைப்பாடு:

பாகிஸ்தானுடனான உறவுகள் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், “பாகிஸ்தானுடனான எங்கள் உறவு எப்போதும் இருதரப்பு அடிப்படையிலேயே அமையும். இது இந்தியாவின் நீண்டகால தேசிய ஒருமித்தக் கொள்கை என்பதைக் குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன். இதில் எந்தவிதமான மாற்றமும் எப்போது இல்லாது தான்,” என்றார்.

அதே நேரத்தில், பாகிஸ்தானுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் முதன்மை பயங்கரவாதம் என்ற ஒன்றிலேயே இருக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார். “இந்தியா எதிர்நோக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்கே உண்டு,” என்ற அவர், பல்வேறு பயங்கரவாதிகள் பட்டியலை இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானிடம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

“பாகிஸ்தான் சார்பில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் தங்களால் கட்டுப்படுத்தப்பட வேண்டும், மூடப்பட வேண்டும். இந்தியா எதை எதிர்பார்க்கிறதென்று பாகிஸ்தானுக்குத் தெரியும். நாங்கள் பேசத் தயாராக இருக்கிறோம், ஆனால் எதைப்பற்றிப் பேச வேண்டும் என்பதற்கான முடிவு எங்களிடம் உருவாகி விட்டது,” என்றார் அவர்.

இந்தியாவின் பாதுகாப்பு, உள்நாட்டுப் பிரச்சனைகள் தொடர்பாக வெளிநாடுகளிடமிருந்து வரவுள்ள ஆதரவு மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து மிக நுணுக்கமாகவும், தெளிவாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version