குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று முதல் இரண்டு நாள்களுக்கு உத்தரப்பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார்.
பரேலி மற்றும் கோரக்பூரில் பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ளவிருக்கிறார்.
பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் 11வது பட்டமளிப்பு விழாவில் திரௌபதி முர்மு கலந்து கொள்ள இருக்கிறார். அதன் பிறகு, விமானம் மூலம் கோரக்பூருக்குச் செல்லும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கு மூன்று நிறுவனங்களின் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதையும் படிக்க: 89 நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ்.. ராகிங் எதிர்ப்பு விதிமுறைகள் பின்பற்றாததால் யுஜிசி நோட்டீஸ்!
மேலும், எய்ம்ஸ் கோரக்பூரின் தொடக்க பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்ள உள்ளார். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு பரேலி மற்றும் கோரக்பூரில் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.