ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளை பின்பற்றத் தவறியதற்காக, நாடு முழுவதும் உள்ள 89 கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நான்கு IIT-கள், மூன்று IIM-கள் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உட்பட, 89 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராகிங் தொடர்பான UGC விதிமுறையின்படி, UGC உடன் இணைக்கப்பட்ட ஒவ்வொரு கல்வி நிறுவனமும் மாணவர்களிடமிருந்து இணக்க ஒப்பந்தம் மற்றும் ராகிங் எதிர்ப்பு ஒப்பந்தங்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
இதையும் படிக்க: மாவோயிஸ்ட்டுகளுடன் இனி பேச்சில்லை.. உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!
ஆனால், அதன் படி, இந்த கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து ஒப்பந்தங்களைப் பெற்று சமர்ப்பிக்கவில்லை என்று தெரிகிறது.
இதனையடுத்து, இந்த நோட்டீசை யுஜிசி அனுப்பியுள்ளது.