வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கானா தலைநகர் அக்ராவில் தரையிறங்கினார். அவருக்கு அந்நாட்டு அதிபர் மஹாமாவால் சிறப்பு வரவேற்பு அளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கானா தலைநகர் அக்ராவில் தரையிறங்கினார். அவரை கானா ஜனாதிபதி ஜான் டிராமானி மஹாமோ விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “கானா தலைநகர் அக்ராவில் தரையிறங்கினேன். ஜனாதிபதி ஜான் டிராமானி மஹாமோ விமான நிலையத்திற்கே வந்து என்னை வரவேற்றது ஒரு சிறப்பு மரியாதையாகும். நமது நாடுகள் நீண்டகால உறவை வலுப்படுத்தவும், ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயவும் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version