மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பொங்கல் உலகளாவிய விழா என்றார்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் நாளை கொண்டாடப்படுகிறது. இன்று அதிகாலை போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. அந்த வகையில் டெல்லியில் உள்ள மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன் வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி உள்ளிட்டோரும், திரை பிரபலங்களான சிவகார்த்திக்கேயன், ரவி மோகன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், பாடகி கெனிஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பொங்கல் வைத்து கலை நிகழ்ச்சியை ரசித்த பிரதமர் மோடி பேசினார். அப்போது, பொங்கல் பண்டிகையை சர்வதேச பண்டிகையாக கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் கலாச்சாரத்தில் உழவர்களே வாழ்வின் ஆதாரம் என போற்றப்படுகிறார்கள். தமிழ் வாழ்வில் விவசாயிகளின் மகத்துவத்தையும், வேளாண்மையையும் போற்றுவதை பிரதிபலிக்கும் பண்டிகையாக பொங்கல் உள்ளது” என பேசியுள்ளார்.
