Close Menu
    What's Hot

    மோசடி வழக்கு; திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரனிடம் 4 மணி நேரம் விசாரணை – தன் மீது பொய்க் குற்றச்சாட்டு என பேட்டி

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»அசாம் அடையாளத்தை அழிக்க முயன்றது காங்கிரஸ்… பிரதமர் மோடி தாக்கு
    இந்தியா

    அசாம் அடையாளத்தை அழிக்க முயன்றது காங்கிரஸ்… பிரதமர் மோடி தாக்கு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ovhrqjf pm modi 625x300 21 April 25.jpg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு, அசாம் அடையாளத்தை காங்கிரஸ் கட்சி அழிக்க முயன்றதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

    அசாம் மாநிலம் குவாஹாட்டியில் மறைந்த முதலமைச்சர் லோகபிரியா கோபிநாத் பர்டோலாய் பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதையடுத்து விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

    நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு, அசாமை ஒருங்கிணைந்த வங்கம் அல்லது கிழக்கு பாகிஸ்தானுடன் இணைக்க முஸ்லிம் லீக்கும், பிரிட்டிசாரும் நினைத்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சியும் துணை போனது. ஆனால் இந்த சதியை காங்கிரஸ் மூத்த தலைவரான பர்டோலாய் எதிர்த்தார்.

    நாட்டில் இருந்து அசாமை பிரிக்கும் சதியை அவர் தடுத்தார். காங்கிரஸ் கட்சி, ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்தையும் பல ஆண்டுகளாக புறக்கணித்து வந்தது. அவை அனைத்தையும் ஒவ்வொன்றாக இந்த மோடி சரி செய்து வருகிறேன்.

    அசாம் முழுவதும் பிரம்மபுத்திரா நதி தடையின்றி ஓடுகிறது. அதேபோல், வளர்ச்சியும் பாஜக தலைமையிலான இரட்டை என்ஜின் அரசின்கீழ் தங்குத் தடையின்றி நடந்து வருகிறது. இது வளர்ச்சியை கொண்டாடும் நாள் ஆகும்.

    அதாவது வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி மட்டுமில்லை, அசாமின் வளர்ச்சியையும் கொண்டாடும் நாள் ஆகும். ஒட்டுமொத்த நாடும், அசாமின் வளர்ச்சிக் கொண்டாட்டத்தை பார்க்கட்டும். இன்றைய தினத்தில், அசாம் வளர்ச்சியில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக கூட்டணியில் 16 தொகுதிகளை கேட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
    Next Article 10 வருசமா கள்ள ஓட்டு கண்ணுக்கு தெரியலையா?. நயினார் நாகேந்திரனுக்கு செந்தில் பாலாஜி பதிலடி!
    Editor TN Talks

    Related Posts

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?

    July 1, 2026

    பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்களா..?? இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டணம்.. விவரம் இதோ!

    July 1, 2026

    அரியானா : ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..! 21 மணி நேர போராட்டம்..! சடலமாக மீட்பு..!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மோசடி வழக்கு; திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரனிடம் 4 மணி நேரம் விசாரணை – தன் மீது பொய்க் குற்றச்சாட்டு என பேட்டி

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.