ஜப்பானின் ஹொக்கைடோவின் குசிரோ கடற்கரைக்கு அருகே 6.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) தெரிவித்துள்ளது. ஜப்பானிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், ஆனால் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படவில்லை என்றும் JMA கூறியுள்ளது.
இற்கு முன் அதே பகுதியில் 2.19 மணிக்கு 4.4 அளவிலான நிலநடுக்கத்துடன் பல பின்னதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. பின்னர், சிகோகுவின் கடற்கரையில் 3.5 அளவிலான நிலநடுக்கம் மாலை 4:45 மணிக்கு, மேலும் குசிரோ அருகே 4.7 அளவிலான இன்னொரு நிலநடுக்கம் 5:07 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது வரை சேதம் அல்லது பாதிப்பு குறித்து உடனடி தகவல்கள் இல்லை. ஜப்பானிய உயரதிகாரிகள் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
2025 ஏப்ரல் மாதம், இந்திய நேரப்படி மாலை 7:34 மணிக்கு, ஜப்பானின் க்யூஷூ பகுதியில் 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் (NCS) தெரிவித்தது.
கடந்த ஜனவரி மாதம், ரிக்டர் அளவுகோலில் 6.9 அளவிலான நிலநடுக்கம் ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்டபோது, சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டது.
ஜப்பான் ‘ரிங் ஆஃப் ஃபயர்’ எனப்படும் பசிபிக் வளைகுடா எரிமலை மற்றும் நிலநடுக்க அச்சுறுத்தல் கோடுகளின் வளையத்திற்குள் உள்ளதால், இடைக்கிடையாக நிலநடுக்கங்களை சந்தித்து வருகிறது.
“சுனாமி மீண்டும் மீண்டும் தாக்கலாம். தயவுசெய்து கடலுக்கு அருகே செல்ல வேண்டாம்,” என ஜப்பான் வானிலை நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. மியசாக்கி மாகாணம், தென்மேற்குப் பகுதியில் உள்ள க்யூஷூ மற்றும் அருகிலுள்ள கோச்சி மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் கடற்கரைகளிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.