Gen Z தலைமுறையை மிரட்டல் மூலம் PM மோடியும், அமித்ஷாவும் அமைதிப்படுத்த முடியாது என ராகுல் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் ஆதரவாளர்களான மாணவர்கள், இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர். பெல்லட் குண்டுகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.  இதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமை மக்களவையில் அமித்ஷாவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி முன் வைத்தார்.  இருப்பினும், இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்படாமல் உள்ளது.

இந்தநிலையில், இன்று காலை தனது X பதிவில் ராகுல்காந்தி, முதலில் அவர்களது எலும்புகளை உடைத்தீர்கள். தற்போது வழக்குப்பதிவு செய்து, அவர்களது SM கணக்குகளை முடக்குகிறீர்கள் என குற்றஞ்சாட்டியுள்ளார். நீங்கள் இருவரும் இந்தியாவின் கடந்த காலம் ஆகிவிட்டீர்கள். எனவே, இந்தியாவின் எதிர்கால தலைமுறையை கவனத்துடன் கையாளுங்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version