இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்திற்கான கூட்டறிக்கை வெளியாகி இருப்பது ஒரு மகத்தான செய்தி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
”இந்தியாவிற்கு, அமெரிக்காவிற்கும் ஒரு மகத்தான செய்தி, இரு பெரிய நாடுகளுக்கும் இடையே ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கூட்டறிக்கை வெளியாகியுள்ளது. வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான அடிப்படையான விஷயங்களில் எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கு இடையே வலுவான உறவுகளுக்கு அதிபர் டிரம்பின் அர்ப்பணிப்புக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்தியாவின் கடின உழைப்பாளி விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், மீனவர்கள் மற்றும் பலருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
மேக் இன் இந்தியா திட்டம் வலுப்பெறும். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்தியா, அமெரிக்கா இடையே முதலீடு மற்றும் தொழில்நுட்ப உறவை மேலும் ஆழப்படுத்தும். உலகளாவிய வளர்ச்சிக்கு பங்களிக்கும். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற பயணத்தில் நாம் முன்னேற்ற பாதையில் செல்லும் நிலையில் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும். உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்க நாக்கள் உறுதிபூண்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
