ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 23வது இந்திய ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இந்திய ரஷ்யா தரப்பு சார்பில் நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் ரஷ்யாவுக்கு திரும்பி விட்டார்.
இந்தியாவுக்கு வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பரிசுகள் சிலவற்றை கொடுத்திருக்கிறார். தன்னுடைய எக்ஸ் கணக்கில் பாரத பிரதமர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்களுக்கு பகவத் கீதையை ( ரஷ்ய மொழி பதிப்பில் ) கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
பகவத் கீதை அல்லாமல் வேறு சில பரிசுகளையும் அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். அவை என்னவென்றால் காஸ்மீர் குங்குமப்பூ, அசாம் டீ தூள், வெள்ளிக்குதிரை, வெள்ளியால் செய்யப்பட்ட தேநீர் கோப்பைகள் மற்றும் மார்பில் கற்களால் செய்யப்பட்ட செஸ் செட்.
இவை அனைத்தையும் நட்பின் அடையாளமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்களுக்கு ராஷ்டிரபதி பவனில் நேற்று இரவு விருந்து கொடுக்கப்பட்டுள்ளது. விருந்தினை முடித்த பின்னர் அவர் மீண்டும் ரஷ்யாவுக்கு திரும்பி இருக்கிறார். அவரை வழி அனுப்ப இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமான நிலையத்தில் கடைசி வரை உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.
