பிரதமர் மோடி 8 நாட்கள் பயணமாக சுமார் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, பிரேசில் நாட்டில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் நேற்று அதிகாலை அந்நாட்டுக்கு சென்றார்.

இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை, பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். இதேபோன்று, கியூபா நாட்டின் ஜனாதிபதி மிகுவேல் டையஸ்-கேனலையும் அவர் சந்தித்து பேசினார். 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர், 21-ம் நூற்றாண்டின் சவால்கள் மற்றும் உலகளாவிய தெற்கு பகுதியானது விளிம்பு நிலையில் உள்ளது என்றார்.

அதனால், சர்வதேச அமைப்புகளில் விரிவான சீர்திருத்தங்களுக்கான அவசர தேவையையும் அவர் சுட்டி காட்டினார். இதேபோன்று இரட்டை நிலைப்பாடுகளால் உலகளாவிய தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிக்கான நலன்களுக்கு ஒருபோதும் முன்னுரிமை அளிக்கப்பட்டதில்லை எனவும் குறிப்பிட்டார். பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இறுதியாக நமீபியா நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version