Close Menu
    What's Hot

    திருச்சி கிழக்கு வேட்பாளர் யார்? பரபரப்பாகும் அரசியல் களம் – பொது வேட்பாளர் நிறுத்தமா?

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    இவ்வளவு பக்கத்துல யானையா? ; அலறி அடித்து ஓடிய பெண் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»இந்து கடவுள்கள் குறித்த கருத்து… சர்ச்சையில் ரேவந்த் ரெட்டி
    இந்தியா

    இந்து கடவுள்கள் குறித்த கருத்து… சர்ச்சையில் ரேவந்த் ரெட்டி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025Updated:December 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rvn
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்து கடவுள்கள் குறித்து தெரிவித்த கருத்தால், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    ஹைதராபாத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், அக்கட்சியையும் இந்து மதத்தையும் ஒப்பிட்டு அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சுதந்திரத்தால்தான், 140 ஆண்டுகளாக கட்சி இருக்கிறது. கட்சியில் சுதந்திரம் இல்லையெனில், பிற மாநில கட்சிகள் போல பல ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி காணாமல் போயிருக்கும். அனைத்து விதமான கருத்துகளை கொண்ட மக்களும், காங்கிரஸ் கட்சியில் உள்ளனர்.

    இந்து மதத்தில் எத்தனை கடவுள்கள் உள்ளனர்? 3 கோடி? ஏன்? யாரையும் திருமணம் செய்யாத அனுமன் உள்ளார். 2 முறை திருமணம் செய்த கடவுளும் உள்ளார். மதுபானம் அருந்தும் கடவுளும் உள்ளார். மதுபானம், இறைச்சியை கடவுளுக்கு மக்களும் படைக்கவும் செய்கின்றனர். இதுபோல பலவிதமான கடவுள்கள் உள்ளனர். அதுபோல்தான் காங்கிரஸ் கட்சியும். பலவித கருத்துகள், சிந்தனைகள் கொண்டோரை காங்கிரஸ் கொண்டுள்ளது.

    நல்ல எண்ணம் இல்லையெனில், அதனால் நமக்கு எந்த பலனும் இல்லை. நமக்கு பிடித்தோரும் உள்ளனர், பிடிக்காதோரும் உள்ளனர்.

    இவ்வாறு ரேவந்த் ரெட்டி பேசினார். அவரின் கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது கருத்துக்களுக்காக இந்து மதத்தினரிடம் ரேவந்த் ரெட்டி மன்னிப்புக் கோர வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாரணாசியில் தொடங்கியது காசி தமிழ் சங்கமம் 4.0
    Next Article 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு.. மத்திய அரசு முடிவு
    Editor TN Talks

    Related Posts

    ராஜ்யசபாவில் ஒலிக்குமா தவெகவின் குரல்..?? வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்..!!

    June 1, 2026

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்சி கிழக்கு வேட்பாளர் யார்? பரபரப்பாகும் அரசியல் களம் – பொது வேட்பாளர் நிறுத்தமா?

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    இவ்வளவு பக்கத்துல யானையா? ; அலறி அடித்து ஓடிய பெண் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    நிறைவேறியது அதிமுக நிர்வாகியின் கடைசி ஆசை..!! கண்ணீர் மல்க.. தஞ்சைக்கு ஓடோடி வந்த இபிஎஸ்..!!

    முதன்முறையாக இணையும் இளையராஜா – மாரி செல்வராஜ்!. ‘மஞ்சணத்தி’ படத்தின் மாஸ் அறிவிப்பு வெளியீடு!

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026

    மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!

    June 1, 2026

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.