Close Menu
    What's Hot

    மூடப்பட்ட பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளை..!! ஒருவருக்கு கத்திக்குத்து..!! சிக்கிய தவெகவினர்..!!

    61 நாட்களுக்குப் பிறகு.. கொத்து கொத்தாக கிடைத்த மீன்கள்..!! மகிழ்ச்சியில் மீனவர்கள்..!!

    பவிஷ் நாராயணின் புதிய அவதாரம்..! ’லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீடு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»இந்தியா»SIR குறித்து டிச. 9, 10ல் மக்களவையில் விவாதம்!
    இந்தியா

    SIR குறித்து டிச. 9, 10ல் மக்களவையில் விவாதம்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    LS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து வரும் 9 முதல் 10ம் தேதி வரை மக்களவையில் விவாதம் நடைபெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ம் தேதி தொடங்கியது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த விவாதிக்கக் கோரி முதல் நாளிலேயே நாடாளுன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். கூட்டத்தொடரின் 2வது நாளான இன்றும் (டிச. 2) SIR குறித்து விவாதம் நடத்தக் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதுகுறித்து ஒத்திவைப்பு நோட்டீசும் அளித்தனர். அதற்கு அனுமதி மறுக்கவே அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  இதையடுத்து, மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து 2 நாட்களாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    இதனிடையே  மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், வந்தே மாதம் பாடல் இயற்றி 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, வரும் 8ம் தேதி மக்களவையில் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. சுமார் 10 மணி நேரம் நடைபெற உள்ள இந்த விவாதத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். மேலும், டிசம்பர்  9ம் தேதி SIR உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதம் நடைபெறும் என்றும் இதற்கும் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டது. இந்த விவாதத்திற்கு டிசம்பர் 10ம் தேதி மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் பதில் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராகவே உள்ளதாகவும், ஆனால், எதிர்க்கட்சிகள் காலக்கெடு விதிக்கக்கூடாது என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article14 வயதில் சீனியர் வீரர்களுக்கே சவால் விடும் சூர்யவன்ஷி !!!
    Next Article இன்று 2வது ஒருநாள் போட்டி.. தொடரை கைப்பற்றுமா இந்தியா?
    Editor TN Talks

    Related Posts

    வெளியானது UPSC முதல்நிலைத் தேர்வு முடிவுகள்..!! 13,343 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி..!!

    June 16, 2026

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    June 15, 2026

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மூடப்பட்ட பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளை..!! ஒருவருக்கு கத்திக்குத்து..!! சிக்கிய தவெகவினர்..!!

    61 நாட்களுக்குப் பிறகு.. கொத்து கொத்தாக கிடைத்த மீன்கள்..!! மகிழ்ச்சியில் மீனவர்கள்..!!

    பவிஷ் நாராயணின் புதிய அவதாரம்..! ’லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீடு..!

    வெளியானது UPSC முதல்நிலைத் தேர்வு முடிவுகள்..!! 13,343 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி..!!

    FIFA World cup 2026: சவுதி அரேபியா Vs உருகுவே: 1-1 டிரா! ‘எச்’ பிரிவு பரபரப்பு உச்சம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.