முதுநிலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென்று தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரும் ஜூன் 15ம் தேதி 2025- 26ம் கல்வியாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வு நடைபெற உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. கணினி மூலமாக நடைபெறும் இந்தத் தேர்வுகள், காலை, பிற்பகல் என இரு கட்டங்களாக நடைபெறும் என்றும், இரு தேர்வுகளுக்கும் வெவ்வேறு வினாக்கள் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், முதுநிலை நீட் தேர்வை 2 கட்டங்களாக நடத்தும் தேசிய தேர்வு முகமையின் முடிவுக்கு தடை விதித்தது. மேலும், இந்த தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 2 கட்டமாக 2 வினாத்தாள்கள் அடிப்படையில் நடத்துவது பாரபட்சத்தை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version