மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலைப்பகுதியில் பாதுகாப்புப் படைகள் மிகப்பெரிய சோதனை நடவடிக்கையை மேற்கொண்டன. இதன் போது நடந்த தாக்குதலில் 31 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதில் 16 பெண்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (CRPF) மற்றும் மாநில பாதுகாப்புப் படைகள் இணைந்து ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கி 11 நாட்களுக்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
மலைப்பகுதியை முற்றுகையிட்ட போது, மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படைகள் துல்லியமான பதிலடி தாக்குதல் நடத்தின. பின்னர், கூடுதல் படைகள் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டன.
இந்த வெற்றியை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமூக வலைதளத்தில் ஒரு பதிவில்:
“ஒருகாலத்தில் சிவப்பு பயங்கரவாதத்தால் ஆட்சி செய்யப்பட்ட மலையில் இன்று இந்தியாவின் மூவர்ணக் கொடி பெருமையாக பறக்கிறது. 2026 மார்ச்சிக்குள் நக்சலிசத்தை முழுமையாக ஒழிப்பது நமது குறிக்கோள்,” எனத் தெரிவித்துள்ளார்.
#NaxalFreeBharat के संकल्प में एक ऐतिहासिक सफलता प्राप्त करते हुए सुरक्षा बलों ने नक्सलवाद के विरुद्ध अब तक के सबसे बड़े ऑपरेशन में छत्तीसगढ़-तेलंगाना सीमा के कुर्रगुट्टालू पहाड़ (KGH) पर 31 कुख्यात नक्सलियों को मार गिराया।
जिस पहाड़ पर कभी लाल आतंक का राज था, वहाँ आज शान से…
— Amit Shah (@AmitShah) May 14, 2025
இது வெறும் ஒரு மோதல் அல்ல – நக்சலிசத்தின் அழிவிற்கு ஒரு முக்கிய கட்டம்:
இந்த தாக்குதலில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் பல முக்கிய கட்டமைப்புகள் உடைந்து விட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறப்பு பயிற்சியுடன் தயார் செய்யப்பட்ட ராணுவத்தினர், சவாலான நிலத்தோற்றங்கள், வெப்பத்தையும் கடந்து, மிகுந்த துணிச்சலுடன் இந்தப் பணியை மேற்கொண்டனர் எனவும் கூறுகின்றன.