Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»இது எனது கடைசி பேரணி.. பதவியேற்பு விழாவிற்கு மீண்டும் வருவேன்!. மே.வங்கத்தில் பிரதமர் சூளுரை!
    இந்தியா

    இது எனது கடைசி பேரணி.. பதவியேற்பு விழாவிற்கு மீண்டும் வருவேன்!. மே.வங்கத்தில் பிரதமர் சூளுரை!

    Editor web3By Editor web3April 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pm modi west bengal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தத் தேர்தலில் இது எனது கடைசிப் பேரணி… மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பாஜகவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள நான் மீண்டும் வர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் திரும்புகிறேன்,” என்று பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.

    மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று பராக்பூரில் நடைபெற்ற ‘விஜய் சங்கல்ப்’ பேரணியில் உரையாற்றினார். மே 4 அன்று பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.

    கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தனது வாழ்க்கையிலும் ஆன்மீகப் பயணத்திலும் வங்காளம் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது என்று கூறினார். “வங்காளத்தின் மீது எனக்கு இருந்த பற்று, சக்தி மீதான பக்தியாகும். இதுவே எனது தனிப்பட்ட ஆன்மீகப் பயணத்தின் ஆற்றல் மையமாக இருந்துள்ளது. வங்காளத்தின் மாபெரும் ஆளுமைகளாலும், ஜனதா ஜனார்த்தனம் எனும் மக்களின் அளவற்ற அன்பாலும் இது உத்வேகம் பெற்றது. இந்த வங்காள மண்ணில் நான் பெற்ற அனுபவங்களை, எனக்குக் கிடைத்த ஒரு பெரும் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன்,” என்று பிரதமர் மோடி கூறினார்.

    மாநிலத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் பராக்பூர் பேரணியே தனது கடைசிப் பொதுக்கூட்டம் என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் முடிவுகள் மீது நம்பிக்கை தெரிவித்தார். “இந்தத் தேர்தலில் இது எனது கடைசிப் பேரணி. மேற்கு வங்கத்தில் நான் சென்ற இடமெல்லாம் மக்களின் மனநிலையைக் கண்டிருக்கிறேன். மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பாஜகவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள நான் மீண்டும் வர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் திரும்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

    மோடியின் வாக்குறுதி என்ன? வங்காளத்தில் அரசு ஆட்சேர்ப்புகள் திட்டமிட்டபடி அறிவிக்கப்படும், ஆட்சேர்ப்புகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும், மேலும் வேலைவாய்ப்பு முகாம்களில் இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்.
    மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 வழங்கப்படும். 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் பெண்களுக்கு ரூ.1.80 லட்சம் கிடைக்கும்” என்று பேசியிருக்கிறார்.

    பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி துன்புறுத்தும் சமூக விரோதிகள் அனைவரும், மே 4ம் தேதிக்குப் பின், மேற்கு வங்கத்தில் அமைய உள்ள புதிய பா.ஜ. அரசின் மூலம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவர்.

    அனைத்து காலிப் பணியிடங்களும் விரைவாக நிரப்பப்படும். அரசு ஊழியர்கள் திரிணாமுல் காங்கிரஸ் குறித்த அச்சத்திலிருந்து விடுபடுவார்கள். அரசு ஊழியர்கள் 7வது ஊதியக் குழுவின் முழுப் பலன்களையும் பெறுவார்கள்.
    கிராமங்களில் 125 நாட்கள் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். இங்கு, கிராமங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக பாஜக அரசு விபி-ஜி ராம் ஜி சட்டத்தை செயல்படுத்தும். மேலும், பிரதமர் விஸ்வகர்மா திட்டம் மற்றும் பிரதமர் சம்பதா திட்டம் ஆகியவை இங்கு முழுமையாக செயல்படுத்தப்படும்.
     நகரங்களில் உள்ள தெருவோர வியாபாரிகள் பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டத்தின் முழுப் பலன்களையும் பெறுவார்கள். வங்கிகளிடமிருந்து உதவி வழங்கப்படும்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈரானுக்கு 3 நாள் கெடு விதித்த டிரம்ப்!. “ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் எண்ணெய் குழாய்கள் வெடித்து சிதறும்!
    Next Article தபால் வாக்குகளும், இவிஎம்மில் பதிவான வாக்குகளும் ஒரு சேர எண்ணப்படும் –தேர்தல் ஆணையம் அறிவிப்பு
    Editor web3
    • Website

    Related Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    July 4, 2026

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    July 4, 2026

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.