கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பெருவயல் பகுதியில் வெளுத்துவாங்கும் கனமழையால் பெரும் விபரீதம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ஷமீர் என்பவரது வீட்டின் அருகில் அமைக்கப்பட்டிருந்த ஆழமான கிணறு, நிலச்சரிவு மற்றும் தொடர் மழை காரணமாக திடீரென உள்வாங்கிப் பள்ளமானது.
இதன் காரணமாக, கிணற்றோடு இணைக்கப்பட்டிருந்த குளியலறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலுமாகச் சரிந்து விழுந்தன. கிணறும் குளியலறையும் திடீரென இடிந்து விழுந்ததால், அந்த வீட்டின் அடித்தளம் பலமிழந்து எப்போது வேண்டுமானாலும் முழுமையாக இடிந்து விழும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தின் போது குளியலறை மற்றும் கிணற்றுப் பகுதி இடிந்து விழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரவி, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
