Close Menu
    What's Hot

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    ”மானம் இல்லாத அமெரிக்கா…” டிரம்ப் பேச்சுக்கு ஈரான் கடும் பதிலடி

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பட்ஜெட் 2026!. நிர்மலா சீதாராமனின் புடவை ரகசியத்தில் தமிழ்நாடு!. 
    இந்தியா

    பட்ஜெட் 2026!. நிர்மலா சீதாராமனின் புடவை ரகசியத்தில் தமிழ்நாடு!. 

    Editor web3By Editor web3February 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    budget nirmala saree
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய வந்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து வந்துள்ள புடவைக்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா?

    தொடர்ந்து 9ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , பட்ஜெட் நாளில் அணிந்து வரும் புடவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மிகவும் ஆடம்பரமாக இல்லாமல், சிம்பிளாக அவர் அணிந்து வரும் புடவைகள் பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்ல; அந்தப் புடவைக்கு பின்னால் நிறைய விஷயங்களும் இருக்கும். அதாவது, அவர் தாக்கல் செய்யும் பட்ஜெட்டின் சாராம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரது புடவை இருக்கும்.

    முந்தைய பட்ஜெட்களிலும் அவர் அணிந்து வந்த புடவைகள் மற்றும் பட்ஜெட்டின் சாராம்சங்கள் நாட்டு மக்களுக்கு குளிர்ச்சியான இனிமை தரும் செய்திகளை வழங்கிய பட்ஜெட்டாகவும் புடவையாகவும் இருந்தது. ஒரு தரப்பினரிடையே விமர்சனங்கள் இருந்தாலும் பரவலாக நாட்டு மக்களுக்கு நன்மை தரும் பட்ஜெட்டாக இருந்தன. இந்நிலையில், இன்று 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    இன்று அவர் தமிழகத்தை பிரதிபலிக்கும் அகையில் காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அணிந்துள்ளார். ஊதா நிற காஞ்சிபுரம் பட்டுப்புடவையில், வெளிர் தங்க – பழுப்பு நிறத்தில் சிறு கட்டங்கள் உள்ளன. மேலும் காபி பிரவுன் பார்டரும் புடவையில் உள்ளது.

    இதேபோல், கடந்த 2019: மங்களகிரி பட்டு (ஆந்திரா) 2021: போச்சம்பள்ளி இக்கட் (தெலுங்கானா) 2022: பொம்காய் பட்டு (ஒடிசா) 2023: இல்கல் புடவை (கர்நாடகா) 2025: மதுபானி ஓவியம் வரையப்பட்ட புடவை (பீகார்) ஆகிய மாநிலங்களை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது.

    ஆனால் இம்முறை தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது சொந்த மாநிலத்தின் கலை மற்றும் கைத்தறிக்கு மதிப்பளிக்கும் வகையில் காஞ்சிபுரம் பட்டைத் தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபட்ஜெட் 2026!. வாழ்த்து பெற்றார் நிர்மலா சீதாராமன்!. தயிர், சர்க்கரையை ஊட்டிய ஜனாதிபதி!
    Next Article மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி கிடைக்குமா?. முதல்வர் ஸ்டாலின் கேள்வி!
    Editor web3
    • Website

    Related Posts

    உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

    July 5, 2026

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    July 5, 2026

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    ”மானம் இல்லாத அமெரிக்கா…” டிரம்ப் பேச்சுக்கு ஈரான் கடும் பதிலடி

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.