Close Menu
    What's Hot

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»கேரளத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் வி.டி. சதீசன்!. காங். தலைவர்கள் பங்கேற்பு!
    இந்தியா

    கேரளத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் வி.டி. சதீசன்!. காங். தலைவர்கள் பங்கேற்பு!

    Editor web3By Editor web3May 18, 2026Updated:May 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    keralam cm oath
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரளாவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களைப் பிடித்து வரலாற்றுச் சாதனை வெற்றி பெற்றது. இதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தச் சூழலில், கேரளாவின் 13-வது முதலமைச்சராக மூத்த காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் இன்று அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார்.

    திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் இன்று காலை நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், கேரள ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் வி.டி. சதீசனுக்கு முதலமைச்சராகப் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். முதலமைச்சருடன் சேர்த்து மொத்தம் 20 அமைச்சர்கள் கொண்ட முழு அமைச்சரவையும் இன்று ஒன்றாகப் பதவியேற்றுக் கொண்டது.

    இந்த விழாவில் தேசிய அளவிலான முக்கியப் பிரமுகர்கள் மற்றும் கூட்டணித் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பதவி விலகிய முன்னாள் முதலமைச்சரும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவருமான பினராயி விஜயனும் இந்த விழாவில் பங்கேற்றார்.

    கடந்த 5 ஆண்டுகளாகக் கேரள சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, அடிமட்டத் தொண்டர்களை ஒருங்கிணைத்து, இந்த இமாலய வெற்றிக்குக் காரணமாக இருந்த 61 வயதான வி.டி. சதீசன் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது கேரள அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தமாகப் பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!
    Next Article பள்ளிகள் திறப்பு!. அமைச்சருடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!
    Editor web3
    • Website

    Related Posts

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    இறுதிவரை மிரட்டிய கேப் வெர்டே அணி!. கூடுதல் நேரத்தில் தப்பித்த அர்ஜென்டினா!. அடுத்த சுற்றுக்கு தகுதி!

    பெனால்டி சூட் அவுட்டில் திக் திக் நிமிடங்கள்!. ஆஸ்திரேலியாவை வெளியேற்றி எகிப்து அசத்தல் வெற்றி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.