தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள பாரில் நடந்த ஒரு பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 14 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று சனிக்கிழமை காலை பிரிட்டோரியாவின் மேற்கே உள்ள அட்டெரிட்ஜ்வில்லில் உள்ள சோல்ஸ்வில் பாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர், 90 பேர் காயமடைந்தனர் என்று SAPS தெரிவித்துள்ளது: “25 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், 11 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, 14 பேர் உயிர் பிழைத்தனர், அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உரிய முறையில் உரிமம் பெறப்படாத பாரில் நுழைந்த அடையாளம் தெரியாத 3 பேர், அனைவரின் மீது திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் 12 வயது சிறுவர்கள் மற்றும் 16 வயது சிறுமி உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 14 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவத்தை அறிந்த உள்ளூர் போலீசார், உடனடியாக அங்கு விரைந்தனர். சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அவர்கள், அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். எதற்காக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பதற்கான போதிய காரணங்களை வெளியிட போலீசார் மறுத்துள்ளனர்.
உள்ளூர் ஊடகமான இன்டிபென்டன்ட் ஆன்லைன், SAPS தேசிய செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் எத்லெண்டா மாத்தேவின் அறிக்கையை மேற்கோள் காட்டி, குறைந்தது மூன்று அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் விடுதிக்குள் நுழைந்ததாகவும், அங்கு சிலர் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளது.
“இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், நாடு முழுவதும் 11,975 உரிமம் பெறாத மதுபானக் கடைகளை மூடி, சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததற்காக 18,676 க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளோம்” என்று அந்த அதிகாரி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். கேப் டவுனின் கேப் பிளாட்ஸ் பகுதியின் புறநகர்ப் பகுதியான பிலிப்பி கிழக்கில் உள்ள R53 சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஏழு ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
