போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 2023 முதல் காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப் படைக்கு இடையே போர் தொடங்கியது. இந்த போரில் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதலில் காசா நகரின் கட்டிடங்கள் இடித்து நொறுங்கி சிதைத்து போயின. குழந்தைகள், பெண்கள் என 69,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்தநிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்ததையடுத்து, கடந்த அக்டோபர் 10ம் தேதி இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், கடந்த 19ம் தேதி முதல் காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் வான் வழித்தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. இதன் மூலம் இதுவரை 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாக காசா அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனிடையே கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதால், வான் வழித்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருப்பினும், கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version