600 கிலோ எடையுடன் கின்னஸ் சாதனை படைத்தவரும் உலகின் மிக அதிக எடை கொண்டவருமான மெக்சிகோவை சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ காலமானார்.
மெக்சிகோவின் அகுவாஸ்காலி யன்ஸ் நகரைச் சேர்ந்தவர் ஜுவான் பெட்ரோ பிராங்கோ (40). கடந்த 2018ம் ஆண்டில் இவரது உடல் எடை 595 கிலோவை எட்டியதால் மிகவும் அவதிப்பட்டார். உலகின் குண்டு மனிதராக (ஆண்) கருதப்படும் இவர், தனது உடல் எடையை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்தார். இதற்காக அந்நாட் டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு முதல்கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
உலகின் அதிக எடை கொண்ட நபர் என்ற கின்னஸ் சாதனை படைத்த இவர், ஒரு கட்டத்தில் இவரால் படுக்கையை விட்டு நகரக்கூட முடியாத நிலை இருந்தது; இவரை இடமாற்றம் செய்யவே எட்டுப் பேர் கொண்ட குழு தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு போன்ற தீவிர உடல்நல பிரச்சனைகளுடன் போராடி வந்த அவர், 2020-இல் கரோனா பாதிப்பிலிருந்தும் மீண்டு சாதனை படைத்தார். இருப்பினும், சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான சிறுநீரகத் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
