ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், 62 வயதில் தனது காதலி ஜோடி ஹேடனை திருமணம் செய்து கொண்டார்.
ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தோனி அல்பானீஸ், கடந்த 2022ம் ஆண்டு முதல் நாட்டின் பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் 2000ம் ஆண்டு கார்மல் மெரி டெம்பட் என்பவரை அன்பானீஸ் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில், கடந்த 2019ம் ஆண்டு அல்பானீஸ்- டெம்பட் தம்பதி விவகாரத்து பெற்றனர்.
இதனிடையே கடந்த 2020ம் ஆண்டு முதல் ஜோடி ஹேடன் என்பவருடன் அல்பானீசுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இந்தநிலையில், அந்தோனி அல்பானீஸ் தனது 62 வயதில், 47 வயது காதலியான ஜோடி ஹேடனை இன்று (நவ. 29) திருமணம் செய்து கொண்டார். தி லாட்ஜில் அமைந்துள்ள பிரதமர் குடியிருப்பில் இந்த திருமணம் நடைபெற்றது. இரு தரப்பினரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஆஸ்திரேலிய வரலாற்றில் உயர்ந்த பதவி வகிப்பவர், தனது பதவிக் காலத்தில் திருமணம் செய்து கொள்வது இதுவே முதல்முறையாகும்.
