இந்தோனேசியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ கடந்தது.

இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அச்சோ ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் மற்றும் ஆறுகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கு வசித்த மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகளும், மாயமானவர்களை தேடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மீட்பு பணியில் ராணுவமும் களமிறங்கி உள்ளது. இதனிடையே மழை தொடர்ந்து பெய்து வருவதால், மீட்பு நடவடிக்கைகளில் சிறிது சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி காயமடைந்து மீட்கப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version