ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்பட பிற சமூக வலைதளங்களை பயன்டுத்த இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் தற்போது சிறுவர், சிறுமிகள் ஆண்ட்ராய்டு, ஐபோன்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். பலரும் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். டிக்டாக், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வது, யூடியூட்பில் சேனல் தொடங்கி வீடியோக்களை பதிவேற்றம் செய்வது என்று இளம் வயதினர்கள் தடம் மாறி வருகின்றனர்.

நம் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த இளம் வயதினர் தங்களின் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தாமல் பலரும் சமூக வலைதளங்களால் தடம் மாறி வருகின்றனர். இதனை தடுக்க ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர் – சிறுமிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

அதாவது ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகளவில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தூக்கமின்மை, கவனச்சிதறல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதனால் ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்குட்பட்ட சிறுவர் – சிறுமிகளின் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இது டிசம்பர் 10ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவித்தது.

இதனால் அதற்குள் சமூக வலைதளங்களில் சிறுவர்- சிறுமிகள் அக்கவுண்ட் வைத்திருந்தால் அதனை நீக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டது. டிக்-டாக், யூடியூப், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களுக்கு இதுதொடர்பான மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதனை மீறினால் அந்த சமூக வலைதள நிறுவனங்களுக்கு ரூ.283 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று வார்னிங் செய்யப்பட்டது.

இதையடுத்து சமூக வலைதள நிறுவனங்கள் 16 வயதுக்கு உட்பட்டவர்களின் கணக்குகளை நீக்கும் பணியை தொடங்கியது. இந்நிலையில் தான் இன்று ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்கள் ஹேப்பியாகி உள்ளாகினர். இதுபற்றி ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது: ‛‛இன்று மிகவும் முக்கியமான நாள். அதேபோல் மிகவும் மகிழ்ச்சியான நாள். பெருமையான நாள். குழந்தைகளுக்கான சமூக வலைதளங்களின் தடை என்பது குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதற்கான உரிமைகளை நிலைநாட்டும் முயற்சியாகும். அதேபோல் பெற்றோர்கள் அதிக மன அமைதியை பெறுவதற்கான வாய்ப்பாகவும் இது அமையும்” என்றார் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version