உலகில் உள்ள அனைவருக்கும் தற்போது மிகப்பெரிய பொழுதுபோக்கு தளமாக இருப்பது இன்ஸ்டாகிராம் தான். இந்த இன்ஸ்டாகிராம் செயலி மூலம் நிறைய பேர் வைரலாகி இருக்கின்றனர். அது எந்த அளவுக்கு என்றால் பலருக்கும் வருவாய் தரும் தளமாக இந்த இன்ஸ்டாகிராம் மாறி உள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் திரைத்துறையில் நடிக்க தொடங்கியவர்களும் ஏராளம்.
பல்வேறு மக்களுக்கு பல வகையில் பயனளிக்கும் இந்த இன்ஸ்டாகிராம் செயலியில் தானும் வைரலாக வேண்டும் என்று பலரும் நாளுக்கு நாள் ரீல்ஸ் போட்டுக்கொண்டு இருக்கின்றனர். அப்படி ரீல்ஸ் போடுகையில் தங்களுடைய பதிவுக்கு கீழ் நிறைய ஹேஷ்டேக்குகளை இணைத்து பதிவு செய்வார்கள். இப்படி செய்வதன் மூலம் அவர்களுடைய பதிவு அதிக அளவில் வைரலாகும். மேலும் அதிக பார்வைகளை அவர்களது பதிவு பெறும். பொதுவாக ஒரு பதிவில் அதிகபட்சமாக 30 ஹேஷ்டேக்குகளை நாம் அந்தப் பதிவில் இணைத்து கொள்ளலாம்.
ஆனால் இனிமேல் அப்படி நடக்கப் போவதில்லை என்று தெரியவந்துள்ளது. ஆம் இனி ஒரு பதிவுக்கு கீழ் அதிகபட்சம் 3 ஹேஷ்டேக்குகளை மட்டுமே இணைத்துக் கொள்ள முடியும். இந்த மாற்றம் கூடிய விரைவில் உலகெங்கிலும் உள்ள அனைத்து இடத்திலும் அமலுக்கு வரப்போகிறது.
உலகில் உள்ள ஒரு சில இடங்களில் இந்த மாற்றம் தற்பொழுது செயல்பாட்டுக்கு வந்துவிட்டது என்றும் தகவல் கிடைத்துள்ளது. எனவே இனி ஒவ்வொரு தனி நபரும் அதிகபட்சம் தங்களுடைய பதிவுக்கு கீழ் வெறும் 3 ஹேஷ்டேக்குகளை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
