நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் புதுமைகளை வெளிகொண்ர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படியான ஒரு புதுமையான தொழில்நுட்பம் என்றால் அது ஏ.ஐ. செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தற்போதைய இளைஞர்களிடம் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் கோடிக்கணக்கானோர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். எழுதுவது மற்றும் ஆராய்ச்சி செய்வது என பல வழிகளில் அதனை பயன்படுத்துகின்றனர்.

இதற்காக பலரும் சாட்ஜிபிடியை சார்ந்து உள்ளனர். இந்த அதிநவீன தொழில்நுட்பத்தால் மனிதர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். இந்த நிலையில் ஓபன் ஏ.ஐயின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன், சாட்ஜிபிடி பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதவது சாட்ஜிபிடியை அப்படியே நம்பவேண்டாம். கேள்வி கேளுங்கள். அப்படி கேட்காமல் அதன் தகவல்களை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

சாட் ஜிபிடியை கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டாம் என எச்சரித்து உள்ள அவர், அதனை ஆய்வு செய்து கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது என பயனாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சாட்ஜிபிடி மீது மக்கள் அதிக அளவிலான நம்பிக்கையை வைத்துள்ளனர். இது ஆச்சரியம் அளிக்கிறது. ஆனால், அதனை நீங்கள் அதிகம் நம்ப வேண்டாம் என கூறியிருக்கிறார்.

அதனை அதிகம் நம்புவது என்பது ஆபத்துகளையும் ஏற்படுத்தும். ஆய்வு செய்யாமல் அதன் பதில்களை அப்படியே ஏற்று கொள்ளும்போது, பயனாளர்களுக்கு ஜோடிக்கப்பட்ட தகவல்கள் அல்லது தவறான தகவல்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். சாம் ஆல்ட்மேனின் இத்தகைய பேச்சு சாட்ஜிபிடியை பயன்படுத்தும் பயனாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version