தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டுப் பணிகளை அதிமுக தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, சென்னை மாவட்டத்தில் மட்டும் 5 சட்டமன்றத் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் உள்ள மொத்தம் 16 தொகுதிகளில், கடந்த காலங்களில் சில தொகுதிகளில் தாங்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளதைக் சுட்டிக்காட்டி பாஜக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. குறிப்பாக  வேளச்சேரி, மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர், விருகம்பாக்கம் போன்ற தொகுதிகளில் தங்களுக்குச் செல்வாக்கு இருப்பதாக பாஜக தரப்பு வாதிடுகிறது.

கடந்த தேர்தலில் வேளச்சேரியில் அ.தி.மு.க. 4 ஆயிரத்து 352 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. இருப்பினும், பாஜகவின் இந்தக் கோரிக்கை அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போன்ற முக்கியமான பகுதிகளில் அதிக தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கினால், அது தங்களின் பலத்தைக் குறைக்கும் என அதிமுக கருதுகிறது.

எனவே, பாஜகவின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதா அல்லது எண்ணிக்கையைக் குறைப்பதா என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version