ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் வெடித்த வன்முறைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் இந்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஈரான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதால் அந்நாட்டின் உச்ச தலைவர் அய்துல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த வாரங்களுக்கு முன்பே தொடங்கி நடந்து வருகிறது. இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வெடித்த வன்முறையில், அரசின் கட்டிடங்கள், வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டன.
ஈரான் உச்ச தலைவர் அயதுல்ல அலி கமேனிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்ப்பட்டன. இந்த நிலையில் போராட்த்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுமார் 2,572 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஈரான் அரசு எடுத்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி உடனே வேளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
போராட்டம் வெடித்துள்ளதால் இந்தியர்கள் உச்சபட்ச பாதுகாப்பை கடைப்பிடிக்கவும், மறு அறிவிப்பு வரும் வரை ஈரானுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
