முட்டை என்பது உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் தினசரி உணவில் இடம்பெறும் மிக முக்கியமான சத்துணவாகும். அதன் புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் காரணமாக முட்டைக்கு உலகளாவிய அளவில் மாறாத தேவை உள்ளது. இந்த தேவை, அந்தந்த நாட்டின் உற்பத்தி திறன், போக்குவரத்து செலவு, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார நிலை, கோழிப்பண்ணை பராமரிப்பு செலவு போன்ற காரணங்களால், முட்டையின் நிலையில் ஒவ்வொரு நாட்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் ஏற்படுகிறது.

 

கீழே உலகின் சில முக்கிய நாடுகளில் ஒரு டஜன் (12) முட்டைகள் எவ்வளவு விலை உள்ளது மற்றும் அவை இந்திய ரூபாயில் எவ்வளவு என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

1.ஸ்விட்சர்லாந்து – ₹607

2. நியூசிலாந்து – ₹531

3. ஐஸ்லாந்து – ₹517

4. டென்மார்க் – ₹409

5. ஆஸ்திரேலியா – ₹354

6. அமெரிக்கா (USA) – ₹353

7. பிரான்ஸ் – ₹350

8. ஐர்லாந்து – ₹349

9. உருகுவே – ₹346

10. இஸ்ரேல் – ₹335

11. யுனைடெட் கிங்டம் (UK) – ₹327

12. ஜெர்மனி – ₹313

13. கனடா – ₹290

14. இந்தியா – ₹81

இந்த ஒப்பீட்டை பார்க்கையில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஒரு முட்டை விலை சராசரியாக 50 ரூபாய் 50 காசாக உள்ளது. ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் தொழிலாளர் ஊதியம், உணவுப்பொருட்களின் விலை, பண்ணை நிர்வாகச் செலவுகள் அதிகம். இதனால் முட்டை விலை இயல்பாக உயர்ந்ததாக இருக்கிறது.

அதேபோல சுவிசர்லாந்து போல சில நாடுகள் கோழி உணவுப் பொருட்கள் (feed) இறக்குமதி செய்வதால் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது. பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும் நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு இயல்பானது. அதனால்தான் ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் முட்டையின் விலை மிக அதிகமாக இருக்கிறது.

இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளில் முட்டையின் விலை ஏன் குறைவாக இருக்கிறது ?

இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பெருமளவில் உற்பத்தி செய்யும் காரணத்தால் விலை குறைவாக கிடைக்கிறது.

அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஒரு டஜன் முட்டைகளின் சராசரி விலை ₹75–₹90 இருக்கும். இது உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானது.

அதற்கான காரணங்கள்:

  • அதிக உற்பத்தி
  • குறைந்த தொழிலாளர் ஊதியம்
  • கோழிப்பண்ணைகள் அதிகம்
  • உள்நாட்டு உணவுப் பொருட்களின் விலை குறைவு

 

இதனால் இந்தியாவில் முட் டை பொதுமக்களுக்கு மிக எளிதில் கிடைக்கும் சத்துணவாக உள்ளது.

பல்வேறு சத்துக்கள் நிறைந்த முட்டையை தினமும் ஒருவர் ஒன்று அல்லது இரண்டு எடுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஒரு முட்டை கொடுப்பது நல்லது. 14 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு முட்டை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு முட்டைகளுக்கு மேல் எடுத்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

 

இரண்டு முட்டைகளுக்கு மேல் உண்ண வேண்டும் என்ற பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனையை கேட்ட பின்னர் இரண்டிற்கும் மேற்பட்ட முட்டைகள் எடுத்துக் கொள்வது நல்லது. அதேபோல முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்வது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version