2014ல் 227 பயணிகள், 12 பணியாளர்களுடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு சென்றபோது MH370 விமானத்தை தேடும் பணி டிசம்பர் 30 முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் 2014ம் ஆண்டு, 227 பயணிகள், 12 பணியாளர்கள் என 239 பேருடன் சென்ற மலேசியாவின் MH370 விமானம் திடீரென மாயமானது. புறப்பட்ட சில மணி நேரங்களில் கட்டுப்பாட்டு மையங்களுடன் கொண்ட அனைத்து தொடர்பும் துண்டிக்கப்பட்டது. மிகத் தீவிரமான தேடுதலுக்கு பிறகும் அந்த விமானம் என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான கடல் ஆராய்ச்சியாளர்கள், விமானப் பொறியாளர்கள், தேடியும் எந்த பயனும் இல்லை. இதனையடுத்து 2017ம் ஆண்டு விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன.

ஆப்ரிக்க கடற்கரை மற்றம் இந்திய பெருங்கடல் பகுதிகளில் மாயமான விமானத்தின் சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், கறுப்புப்பெட்டிகள் உள்ளிட்ட விமானத்தின் பெரும்பகுதி பாகங்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. பல ஆயிரம் சதுர கிலோமீட்டரில் 200 மில்லியன் டாலர்கள் செலவில் சீனா, மலேசியா, ஆஸ்திரேலியா அரசுகளின் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

இதனிடையே, அந்த விமானத்தை தேடும் பணியை டிச.30 முதல் மீண்டும் தொடங்க மலேசிய அரசு முடிவெடுத்துள்ளது. “No Find, No Fee” என்ற ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவின் Ocean Infinity நிறுவனம், 55 நாட்கள் இடைவிடாத தேடுதல் பணியை மேற்கொள்ள உள்ளதாக மலேசிய அரசு கூறியுள்ளது. விமான பாகங்களை அந்நிறுவனம் கண்டறிந்தால், $70 மில்லியன் கொடுக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version