ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஆல்பைன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஜெர்மாட் கிராமம், ஒருபுறம் மேட்டர்ஹார்ன் சிகரத்தையும் மறுபுறம் கோர்னெர்கிராட் முகட்டையும் கொண்ட கண் கவரும் காட்சிகளுக்குப் பெயர் வீட்டுவசதி பற்றாக்குறை ஒரு தீவிரமான பிரச்சினை. மலிவு விலையில் இடவசதி இல்லாததால் பல குடியிருப்பாளர்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.” கடந்த மாதம் ஒரு பொது விசாரணையின் மூலம் கிராமத்திற்குக் கீழே உள்ள பள்ளத்தாக்கு விவசாய நிலத்தை அவர் கைப்பற்றினார், மேலும் 1,000 வாகனங்களுக்கான பார்க்கிங், ஒரு விளையாட்டு மையம், பகல்நேர பராமரிப்பு வசதிகள், கடைகள் மற்றும் உணவகங்களை கட்டிடத்திற்குள் சேர்க்கும் திட்டங்களை வெளிப்படுத்தினார்.. இந்த கிராமத்தின் நிரந்தர மக்கள் தொகை சுமார் 5,800 ஆக இருந்தாலும், சுற்றுலா சீசன்களில் வரும் சுற்றுலா பயணிகளின் கணக்கை சேர்த்தால் இந்த எண்ணிக்கை 32,000 த்துக்கும் மேல் அதிகரிக்கும். இதன் விளைவாக, சராசரி வீட்டு விலைகள் ஒரு சதுர மீட்டருக்கு 20,000 சுவிஸ் பிராங்குகளை (தோராயமாக இந்திய மதிப்பில் 22,50,000 ரூபாய்) எட்டியுள்ளது. இது ஐரோப்பாவின் மிக அதிக விலை வாய்ந்த இடங்களில் ஒன்றாகும்.
மேட்டர்ஹார்ன் அடிவாரத்தில் உள்ள கிராமம் தான் ஜெர்மாட் கிராமம். ஜெர்மாட் கிராமத்தை சேர்ந்த 61 வயதான கட்டிடக் கலைஞர் ஹெய்ன்ஸ் ஜூலன், மேட்டர்ஹார்னில் 260 மீட்டர் உயரக் கட்டமைப்பைக் கட்டும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்திருக்கிறார். “லீனா சிகரம்” என்று அழைக்கப்படும் இந்த திட்டத்திற்கு 500 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் 5630 கோடி ரூபாய்) முதலீடு தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவரது திட்டத்தில் கீழ் 32 தளங்களில் உள்ளூர்வாசிகளுக்கு மலிவு விலையில் வீடுகள் இருக்கும், மேல் 30 தளங்கள் பணக்கார வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலக்காகக் கொண்ட ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒதுக்கப்படும். இந்த கட்டிடத்தில் 2,500 இருக்கைகள் கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி அரங்கமும் இருக்கும்.
இது சம்பந்தமாக சமீபத்தில் பேசிய அவர், “ வீட்டுவசதி பற்றாக்குறை ஒரு தீவிரமான பிரச்சனையாக இங்கு பார்க்கப்படுகிறது. மலிவு விலையில் இடவசதி இல்லாததால் பல குடியிருப்பாளர்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கடந்த மாதம் ஒரு பொது விசாரணையின் மூலம் கிராமத்திற்குக் கீழே உள்ள பள்ளத்தாக்கு விவசாய நிலத்தை அவர் கைப்பற்றினார், மேலும் 1,000 வாகனங்களுக்கான பார்க்கிங், ஒரு விளையாட்டு மையம், பகல்நேர பராமரிப்பு வசதிகள், கடைகள் மற்றும் உணவகங்களை கட்டிடத்திற்குள் சேர்க்கும் திட்டங்களை தன் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
ஆனால் அவரது இந்த திட்டத்திற்கு பல எதிர்ப்புகள் தற்பொழுது கிளம்பியுள்ளன. இந்தத் திட்டம் உண்மையானால் நிறைய சுற்றுலா பயணிகள் இந்த இடத்திற்கு வருவார்கள். அப்படி வரும் பட்சத்தில் இந்த இடத்தின் அழகு குறைந்து விடும். கிராமத்தின் இயற்கை சேதப்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த திட்டம் வராமல் இருப்பது தான் நல்லது என்றும் பொதுமக்கள் இடையே கருத்து எறிந்துள்ளது.
