ரஷ்யாவிற்குச் சொந்தமான ‘AN 26’ ரக ராணுவ விமானம், கிரிமியா தீவுப் பகுதியில் எதிர்பாராத விதமாக விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 23 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என மொத்தம் 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ரஷ்ய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விமானம் தரையிறங்க முயன்றபோது அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த விபத்து குறித்து விளக்கம் அளித்துள்ள ரஷ்ய ராணுவம், விமானத்தின் மீது எந்தவிதமான வெளிப்புறத் தாக்குதலோ அல்லது ஏவுகணைத் தாக்குதலோ நடத்தப்படவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விமானத்தின் கறுப்புப் பெட்டியை மீட்டு விபத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

“மார்ச் 31 அன்று, மாஸ்கோ நேரப்படி சுமார் 18:00 மணியளவில், கிரிமியன் தீபகற்பத்தின் மீது திட்டமிடப்பட்ட பயணத்தில் இருந்த ஆன்-26 ராணுவ போக்குவரத்து விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது,” என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது

இதேபோல், கடந்த வாரம் கொலம்பியா நாட்டில் நிகழ்ந்த ராணுவ விமான விபத்தில் 70 பேர் பலியான சோகம் உலக நாடுகளிடையே இன்னும் ஆறாத வடுவாக இருந்து வருகிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், தற்போது ரஷ்யாவில் நிகழ்ந்துள்ள இந்த அடுத்தடுத்த விமான விபத்துச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version