Close Menu
    What's Hot

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    செமிகான் 2.0, மொபைல் உற்பத்தி உட்பட ₹2.19 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்! மத்திய அமைச்சரவை அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதி மசூத் அசார் உலா… உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்…
    உலகம்

    பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதி மசூத் அசார் உலா… உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பயங்கரவாதி மசூத் அசார் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உலா வருவதாக உளவுத்துறை கண்டறிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அமெரிக்கா மற்றும் ஐ.நா., சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் மசூத் அசார். ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான இவர், 2016-ம் ஆண்டு தான்கோட் விமானப்படை தளம் தாக்குதல், 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர். பஹல்காம் சம்பவத்தை அடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

    இந்த தாக்குதலின் போது மசூத் அசாரின் குடும்பமும் கொல்லப்பட்டனர். ஆனால் மசூத் மட்டும் தப்பிவிட்டதாகவும், அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் குறித்து தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் அவரது நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை கண்டறிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பஹாவல்பூரில் இருந்து 1000 கி.மீ., தொலைவில் உள்ள கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் மசூத் தென்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. அதேபோல, ஸ்கர்டு பகுதியிலும் அவனது நடமாட்டம் இருப்பதை உளவுத்துறை கண்டறிந்துள்ளது. இந்த ஸ்கர்டு பகுதி என்பது, கில்ஜித்-பல்திஸ்தான் பகுதிக்கு உட்பட்ட ஒரு நகரமாகும். இங்கு 2 மசூதிகள், அரசு மற்றும் தனியார் ஓய்வு விடுதிகள் அதிகம் உள்ளன.

    ஆப்கானிஸ்தானில் தான் மசூத் அசார் ஒளிந்து கொண்டிருப்பார் எனவும், பாகிஸ்தான் மண்ணில் அவர் இருந்தால் உடனடியாக பிடித்து இந்தியாவிடம் ஒப்படைப்போம் எனவும் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெண்கள் குறித்து இழிவாக பேசிய சீமான்… மாதர் சங்கம் புகார்…
    Next Article மேற்கு வங்கம் வளர்ச்சிக்கு யாரால் தடை… பிரமர் மோடியின் குற்றச்சாட்டு…
    Editor TN Talks

    Related Posts

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    July 15, 2026

    1,599வது நாளை எட்டிய ரஷியா – உக்ரைன் போர்..!! இன்னமும் குறையாத சூடு.. தொடரும் தாக்குதல்..!!

    July 15, 2026

    முதல்ல கரப்பான் பூச்சி.. இப்போ ‘பிராய்லர் கோழி’..!! வங்கதேசத்தில் உருவான புதிய கட்சி..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    செமிகான் 2.0, மொபைல் உற்பத்தி உட்பட ₹2.19 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்! மத்திய அமைச்சரவை அதிரடி!

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.