Close Menu
    What's Hot

    ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு..!! சுத்தமாகும் வகுப்பறைகள்.. பணிகள் தீவிரம்..!!

    திமுகவுக்கு ஷாக்..!! உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக MLA-க்கள் ராஜினாமா..??

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»எவரெஸ்ட் சிகரத்தை வென்று திரும்பும்போது சோகம்!. 2 இந்தியர்கள் பரிதாப  பலி!
    உலகம்

    எவரெஸ்ட் சிகரத்தை வென்று திரும்பும்போது சோகம்!. 2 இந்தியர்கள் பரிதாப  பலி!

    Editor web3By Editor web3May 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Mount Everest 2 indians die
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நேபாளப் பகுதியில் நிலவிய சாதகமான வானிலையைப் பயன்படுத்தி, ஒரே நாளில் 274 மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து புதிய உலக சாதனை படைத்தனர். இந்த சாதனையாளர்களில் இந்தியாவைச் சேர்ந்த அருண் குமார் திவாரி மற்றும் சந்தீப் ஆரே ஆகிய இரு வீரர்களும் அடங்குவர். இவர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து தங்களது இலக்கை வெற்றிகரமாக எட்டினர்.

    சிகரத்தை வென்று பெருமையுடன் கீழே இறங்கத் தொடங்கியபோது, ‘டெத் ஜோன்’ (Death Zone) எனப்படும் 8,000 மீட்டருக்கும் அதிகமான உயரமான பகுதியில் நிலவிய கடுமையான குளிர், ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் அதீத உடல் சோர்வு காரணமாக இருவரும் கடுமையான உடல்நலக் குறைவுக்கு ஆளாகினர்.

    ஷெர்பா (Sherpa) மீட்புக் குழுவினர் மற்றும் வழிகாட்டிகள் தங்களது உயிரைப் பணையம் வைத்து இவர்களைக் காப்பாற்ற நள்ளிரவிலும் தீவிரமாகப் போராடினர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இருவரும் மலையிலேயே தங்களது இறுதி மூச்சை விட்டனர்.

    அண்மைக்காலமாக எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறுகிய கால வானிலை மாற்றத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் மலையேறுவதால், குறுகிய பாதைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல்  ஏற்படுகிறது.

    இதனால், ஆபத்தான உயரங்களில் வீரர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதுவே மலையேறுபவர்களின் ஆக்ஸிஜன் அளவு குறையவும், கடுமையான சோர்விற்கும் முக்கியக் காரணமாக அமைகிறது என நிபுணர்கள் கவலை தெரிவிப்பதோடு, இத்தகைய கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் எச்சரித்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலமைச்சர் விஜய்யை சந்திக்க தமிழகம் வரும் மலேசிய பிரதமர்?
    Next Article எலிமினேட்டரில் SRH! அந்த 4-வது இடத்தை பிடிக்கப் போவது யார்?
    Editor web3
    • Website

    Related Posts

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    June 1, 2026

    மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி… பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியா?

    June 1, 2026

    35 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!. மே.வங்க அமைச்சரவையின் பலம் 41 ஆக உயர்வு!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு..!! சுத்தமாகும் வகுப்பறைகள்.. பணிகள் தீவிரம்..!!

    திமுகவுக்கு ஷாக்..!! உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக MLA-க்கள் ராஜினாமா..??

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    மேகதாது திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி..!! சென்னையில் மதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்..!!

    தமிழக அரசியலில் சாதி-மத பிரிவினை..!! முதல்வர் விஜய்க்கு அப்பாவு சரமாரி கேள்விகள்..!!

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.