Close Menu
    What's Hot

    நீட் தேர்வு ரத்து , மீனவர் விடுவிப்பு, திருக்குறள் தேசிய நூல் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கோரிக்கை

    செப்டம்பர் 4-இல் வெளியாகிறது சூரியின் மண்டாடி

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்!. 5,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! பள்ளிகள் மூடல்!.
    உலகம்

    அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்!. 5,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! பள்ளிகள் மூடல்!.

    Editor web3By Editor web3February 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    us snowstorm
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்க கிழக்கு கடற்கரையில் திங்கட்கிழமை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது, மேரிலாந்து முதல் மைனே வரையிலான பல மாநிலங்களில் பலத்த காற்று மற்றும் பனிப்புயல் எச்சரிக்கைகள் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர். கடந்த பத்தாண்டுகளில் இதுவே மிகவும் வலிமையான புயல் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    பனிப்புயல் காரணமாக சுமார் 5,600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் பனி மலைபோலக் குவிந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    நியூயார்க் மற்றும் பாஸ்டன் நகரங்களில் உள்ள பொதுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பல வணிக நிறுவனங்களும், அருங்காட்சியகங்களும் மூடப்பட்டுள்ளன.

    நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க்கில் 19 இன்ச் அளவிற்கும், ரோட் தீவின் வார்விக் பகுதியில் 3 அடி அளவிற்கும் பனி கொட்டியுள்ளது. மணிக்கு 133 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

    பனி மற்றும் பலத்த காற்றினால் மின்கம்பங்கள் சேதமடைந்து சுமார் 4,50,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன.

    வீடற்றவர்களை மீட்புக் குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். இந்த வார இறுதியில் மீண்டும் ஒரு பனிப்புயல் வர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article40 கேட்ட பாஜக!. 25 தான் என கையை விரித்த இபிஎஸ்?. தாமரைக்கு நோ சொல்லும் சிறிய கட்சிகள்!.
    Next Article அனைத்து குடும்பத்திற்கும் ரூ.10,000!. புதிய தேர்தல் வாக்குறுதியளித்த இபிஎஸ்!
    Editor web3
    • Website

    Related Posts

    நீட் தேர்வு ரத்து , மீனவர் விடுவிப்பு, திருக்குறள் தேசிய நூல் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கோரிக்கை

    June 11, 2026

    செப்டம்பர் 4-இல் வெளியாகிறது சூரியின் மண்டாடி

    June 11, 2026

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் தேர்வு ரத்து , மீனவர் விடுவிப்பு, திருக்குறள் தேசிய நூல் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கோரிக்கை

    செப்டம்பர் 4-இல் வெளியாகிறது சூரியின் மண்டாடி

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

    மீண்டும் உடையும் உத்தவ் சிவசேனா – மகராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.