சட்டவிரோதமாக குடியேறிய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின்விசாக்களை அமெரிக்கா ரத்து செய்து அதிர்ச்சி அளித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அதீத வரி விதிப்பு, குடியேற்றம், விசா உள்ளிட்டவைகளில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து உலக நாடுகளையும், அமெரிக்க வாழ் குடியேறிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார். அந்த வகையில் சட்ட விரோத குடியேற்ற விசா ரத்து நடவடிக்கை பலரை கலக்கமடைய செய்துள்ளது.

சட்டவிரோத குடியேற்ற விசா ரத்து குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், 8 ஆயிரம் மாணவர்களின் விசாக்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 2,500 பேரின் விசாக்கள் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மொத்தமாக ஒரு லட்சம் விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும், இவர்கள் அனைவரும் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துல்ளது.

தேச பாதுகாப்புக்காகவும், குடியேற்ற சட்டங்களை அமல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும், விசா ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேபோல் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், அமெரிக்க சட்டங்களை மீறி நடந்து கொள்பவர்கள் அவர்கள் மாணவர்களாக இருந்தாலும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version