மத்திய கிழக்கில் ஈரான் நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டித்து, ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து ஒரு முக்கிய கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்தி வரும் “பொறுப்பற்ற” ஏவுகணைத் தாக்குதல்களை இந்த மூன்று நாடுகளும் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளன.

ஈரானின் இந்தத் தாக்குதல்களை எதிர்கொள்ளவும், பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக இந்நாடுகள் அறிவித்துள்ளன.

தங்கள் நாட்டு குடிமக்களின் நலன்களையும், நட்பு நாடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய ஈரான் மீது தற்காப்புத் தாக்குதல்களை நடத்தவும் தயங்க மாட்டோம் என அவை எச்சரித்துள்ளன. குறிப்பாக, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவப் பயன்படும் ஈரானின் தளங்களை அழிக்கத் தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன்வர வேண்டும் என்றும் ஐரோப்பியத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version