நமது தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் தனித்துவமான உணவு வகைகள் உள்ளன. செட்டிநாடு உணவுகளுக்கென்று ஒரு சிறப்பான இடமுண்டு. அவற்றில் செட்டிநாடு கார சட்னி மிகவும் பிரபலம். அதை எப்படி சுலபமாக செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி – 2
வரமிளகாய் – 10
பெரிய வெங்காயம் – 1 (சிறியது)
புளி – சிறிதளவு (நெல்லிக்காய் அளவு)
பூண்டு – 12 பல்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க: எண்ணெய், கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை நறுக்கி/சுத்தம் செய்யவும்.
மிக்ஸியில் வரமிளகாய், பூண்டு, வெங்காயம், தக்காளி, புளி, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு நீர் சேர்க்கலாம்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
அரைத்த சட்னியை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் செட்டிநாடு கார சட்னி தயார்.