Close Menu
    What's Hot

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    1,599வது நாளை எட்டிய ரஷியா – உக்ரைன் போர்..!! இன்னமும் குறையாத சூடு.. தொடரும் தாக்குதல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»LIFESTYLE»குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கிறதா.. இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க.. திரும்ப திரும்ப கேப்பாங்க!
    LIFESTYLE

    குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கிறதா.. இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க.. திரும்ப திரும்ப கேப்பாங்க!

    Editor TN TalksBy Editor TN TalksMay 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sweet
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உங்கள் பிள்ளைகள் திடீரென்று ஸ்வீட் கேட்கிறார்கள், ஆனால் வீட்டில் ஸ்வீட் இல்லையா? கவலைப்பட வேண்டாம். வீட்டில் 1/2 கப் சேமியாவும், 1 மூடி தேங்காயும் இருந்தால், அவற்றை கொண்டு அருமையான ஸ்வீட் செய்யலாம்.

    இந்த ஸ்வீட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருவேளை உங்கள் வீட்டிற்கு திடீரென்று விருந்தினர்கள் வந்தால், அவர்களுக்கு இதை செய்து கொடுக்கலாம். இந்த ஸ்வீட்டை செய்து கொடுத்தால், நிச்சயம் பாராட்டைப் பெறுவீர்கள். மேலும், உங்கள் பிள்ளைகள் இதை ஒருமுறை சாப்பிட்டால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். இந்த தேங்காய் சேமியாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

    தேவையான பொருட்கள்:

    * நெய் – 1 டீஸ்பூன்
    * சேமியா – 1/2 கப்
    * தண்ணீர் – 2 கப்
    * உப்பு – 1 சிட்டிகை
    * சர்க்கரை – 1 கப்
    * ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்
    * ஆரஞ்சு ஃபுட் கலர் – 1 சிட்டிகை
    * நெய் – 1 டீஸ்பூன்
    * முந்திரி – 5 (பொடியாக நறுக்கியது)
    * தேங்காய் – 1 மூடி (துருவியது)
    * சர்க்கரை – 2 டீஸ்பூன்

    செய்முறை:

    * முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் சேமியாவை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
    * பின் அதில் 2 கப் தண்ணீர் மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி, சேமியாவை வேக வைக்கவும்.
    * சேமியா வெந்ததும், அதில் 1 கப் சர்க்கரை, 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள், 1 சிட்டிகை ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்த்து கிளறி, வற்றும் வரை வதக்கி ஒரு தட்டில் போட்டு குளிரவைக்கவும்.
    * அதே வாணலியில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து உருகியதும், பொடியாக நறுக்கிய முந்திரியை பொன்னிறமாக வறுக்கவும்.
    * பின்னர் அதில் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
    * பின்பு 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கிளறி, வேக வைத்த சேமியாவை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான ஸ்வீட் தேங்காய் சேமியா தயார்.

    coconut sweet semiya coconut sweet semiya in tamil snacks recipes snacks recipes in tamil sweet coconut semiya sweet coconut semiya in tamil sweet recipes sweet recipes in tamil ஸ்நாக்ஸ் ரெசிபிக்கள் ஸ்வீட் தேங்காய் சேமியா ஸ்வீட் ரெசிபிக்கள்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎன்ன அணுகுண்டு போட்டாலும் இந்த உயிரினம் மட்டும் சாகாதா… காரணம் என்ன?
    Next Article புதிய தேர்தல் உத்திகளுடன் களம் இறங்கும் தி.மு.க… கட்சியில் செய்யப்போகும் மாற்றங்கள் என்ன?
    Editor TN Talks

    Related Posts

    சர்வதேச யோகா தினம் 2026!. உடலையும் மனதையும் காக்கும் யோகாசனத்தின் அசாத்திய நன்மைகள்!

    June 21, 2026

    இதயத்தை பாதுகாக்கும் கோவிட் தடுப்பூசிகள்!. கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்!. புதிய ஆய்வின் உண்மை!

    June 18, 2026

    நீங்கள் சாப்பிடுவது ஐஸ்கிரீமா… ப்ரோசன் டெசர்டா? – வரிசைக் கட்டும் நோய்கள்… எச்சரிக்கும் நிபுணர்கள்!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    1,599வது நாளை எட்டிய ரஷியா – உக்ரைன் போர்..!! இன்னமும் குறையாத சூடு.. தொடரும் தாக்குதல்..!!

    விலை பேசப்படும் எம்.எல்.ஏ-க்கள்:  தவெக மீதான குற்றச்சாட்டு குறித்து திருமாவளவன் கவலை

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.