பொதுவாக நாம் அனைவருக்குமே ஏதாவது ஒரு கட்டத்தில் உடல் நிலை சரியில்லாமல் போகி விடும். அப்படி நமக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நாம் மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி உட்கொள்வோம். அப்படி நாம் உட்கொள்ளும் டானிக் ஆரஞ்சு அல்லது வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு உண்மையான காரணம் உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் பரவாயில்லை, அதற்கான உண்மையான காரணத்தை இங்கு காணலாம்.  இதற்கான காரணம் வெளிர் பழுப்பு நிறமானது சூரிய ஒளியில் இருந்து வரும் UV எனப்படும் புற ஊதா கதிர்களை தடுக்கும் திறனை அதிக அளவு கொண்டுள்ளது.

பொதுவாக UV எனப்படும் புற ஊதா கதிர்கள் மருந்துகளின் தன்மையை கெடுத்து விடும். எனவே தான் இந்த வெளிர் பழுப்பு நிறத்திலேயே அனைத்து மருந்து பாட்டில்களும் தயாரிக்கப்படுகின்றது.

வெளிச்சம் மற்றும் வெப்பம் ஆகியவற்றால் எளிதாக பாதிக்கப்பட்டு விடும். அதிலும் குறிப்பாக புற ஊதாக் கதிர்கள் இவற்றை பெருமளவில் பாதிக்கும். மருந்து, மாத்திரைகளை சூரிய ஒளி படுமாறு வைக்கும்போது அதன் வெப்பநிலை மற்றும் புற ஊதாக் கதிர்கள் மருந்து கலவையில் பட்டு வேதியியல் வினை புரிந்து புதிய பொருட்களை உருவாக்கும். அதன் காரணமாக இயற்கையான மருந்தின் குணம் மாறி வீரியம் குறைந்து விடும். சில நேரங்களில் அது எதிர்வினையாற்றுவதும் நிகழ வாய்ப்புண்டு.

மருந்துப் பொருட்கள் பல்வேறு வேதிப்பொருட்களின் கலவைதான். இக்கலவைகள் இந்த மாதிரியான நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டு மருந்து பாட்டில்கள் பெரும்பாலும் அடர்த்தியான கரும் பழுப்பு நிறத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதுவே புற ஊதாக் கதிர்களை பாட்டிலில் உள்ளே செல்வதைத் தடுக்க உதவும். மேலும், அவற்றை இருளான இடத்தில் வைக்கும்போது அதில் புற ஊதாக் கதிர்கள் வினைபுரிவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. மேலும், அவை குளிர்ந்த இடத்தில் இருக்கும்போது வெப்பம் காரணமாகவும் பாதிப்பு ஏற்படாது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version